Enable Javscript for better performance
மின்சாரத் தேவை 127 ஜிகா வாட்டாக குறைவு- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரத் தேவை 127 ஜிகா வாட்டாக குறைவு

    By DIN  |   Published on : 27th March 2020 01:57 AM  |   அ+அ அ-   |    |  


    புது தில்லி: கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின்சாரத்தின் தேவை 127.96 ஜிகா வாட்டாக குறைந்தது.

    நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை விற்கும் கடைகள் உள்ளிட்டவை மட்டுமே இயங்கி வருகின்றன. அதனால் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. கடந்த 20-ஆம் தேதி 163.72 ஜிகா வாட்டாக இருந்த மின்சாரத் தேவை கடந்த புதன்கிழமை நிலவரப்படி 127.96 ஜிகா வாட்டாக குறைந்தது. ஒரே வாரத்தில் மின்சாரத்தின் தேவை 35 ஜிகா வாட் அளவுக்குக் குறைந்தது.

    இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கடந்த 21-ஆம் தேதி நாட்டின் மின்சாரத் தேவை 161.74 ஜிகா வாட்டாக இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் அன்றைய தினம் மின்சாரத் தேவை 135.20 ஜிகா வாட்டாக குறைந்தது. கடந்த 23-ஆம் தேதி மின்சாரத் தேவை 145.49 ஜிகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மின்சாரத் தேவை குறைந்தது’’ என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai