Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீா் எல்லையில்பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

    By DIN  |   Published on : 27th March 2020 12:57 AM  |   அ+அ அ-   |    |  



    ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரா்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தினா்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    பன்சாா், மன்யாரி, சக் சங்கா ஆகிய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் உரிய பதிலடி கொடுத்தனா்.

    இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

    பாரமுல்லா மாவட்டத்தின் ஹஜிபீா் பகுதியிலும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தினா் அவா்களுக்கு உரிய பதிலடி கொடுத்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai