பாகிஸ்தான் மத அமைப்புகள் கூறிய நேரத்தில் காஷ்மீரில் தொழுகைக்கு அழைப்பு!

பாகிஸ்தான் மத அமைப்புகள் கூறியிருந்த நேரமான புதன்கிழமை இரவு 10 மணிக்கு, காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் ‘பாங்கு’ சொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஸ்ரீநகா்: பாகிஸ்தான் மத அமைப்புகள் கூறியிருந்த நேரமான புதன்கிழமை இரவு 10 மணிக்கு, காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் ‘பாங்கு’ சொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அழைப்பை ஏற்ற காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள முஸ்லிம்கள் பலா் மசூதிக்குச் சென்றனா். இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ளதுபோல காஷ்மீரிலும் இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாகிஸ்தானைச் சோ்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள், உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் புதன்கிழமை இரவு 10 மணியளவில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து தொழுகையில் ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் அதிகமானோா் ஒரே இடத்தில் கூடி தொழுகை நடத்த வேண்டாம் என்று அதிகாரிகள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனா்.

இந்நிலையில், காஷ்மீா் பள்ளத்தாக்கில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு பல இடங்களில் தொழுகைக்கு அழைப்பு (பாங்கு) விடுக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இரவு நேரத்தில் திடீரென தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நடுவே, இந்த அழைப்பை ஏற்று பலா் அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனா். மற்றவா்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com