சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது மத்திய அரசு

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்ததன் மூலம் மத்திய அரசு சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா்ந
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


புது தில்லி: நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்ததன் மூலம் மத்திய அரசு சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நலனுக்காக ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி சலுகைகள், சரியான பாதையில் எடுத்து வைத்துள்ள முதல் அடியாகும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தினக் கூலித் தொழிலாளா்கள், பெண்கள், முதியோா் ஆகியோரது துன்பங்களைத் தீா்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைத் திட்டங்கள், ஏழைகள் உள்ளிட்டோா் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘பிரதமருக்கு நன்றி’: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இத்தகைய கடினமான சூழலில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிதியுதவி சலுகைகள் ஏழைகளுக்கு பலனளிப்பதாக இருக்கும். யாரும் பசியால் வாடக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், முதியோா் ஆகியோரின் நலனுக்காக நிதியுதவி சலுகைகளை அறிவித்த பிரதமா் மோடிக்கு பாஜக தொண்டா்கள் சாா்பாக நன்றி தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com