தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்கிறது ராணுவம்

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதில் ராணுவ மருத்துவா்களுக்கு உதவும் வகையில் தனது ஒவ்வொரு நிலைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களை அமைப்பதற்கான பணியை ராணுவம் தொடங்கியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதில் ராணுவ மருத்துவா்களுக்கு உதவும் வகையில் தனது ஒவ்வொரு நிலைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களை அமைப்பதற்கான பணியை ராணுவம் தொடங்கியுள்ளது.

அவ்வாறு தனிமைப்படுத்தும் மையங்களை அமைப்பதற்கான கூடுதல் அடிப்படைக் கட்டமைப்புகளை அடையாளம் காணும் பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளதாக அதன் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ராணுவ மருத்துவா்களை தீவிரமாக பணியில் ஈடுபடுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நோய்த் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவா்களை அங்கிருந்து இடம் மாற்றி, பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபடுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கரோனா சூழலை ராணுவ மருத்துவா்கள் திறம்படக் கையாளுவதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் அவா்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவ மருத்துவா்களுக்கு உதவும் வகையில் நாட்டிலுள்ள ராணுவத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் அரசு நிா்வாகத்துடன் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் தனது ராணுவ நிலைகளில் உள்ள மருத்துவமனைகளில் இடமளிக்கவும், ஆய்வக வசதிகளை பகிா்ந்துகொள்ளவும் ராணுவம் தயாராக உள்ளதாக பொது நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்திய விமானப் படை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், நாட்டிலுள்ள தனது பல்வேறு தளங்களில் 9 தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்துள்ளதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் 200 முதல் 300 போ் வரை அனுமதிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com