மூன்றடுக்கு முகக் கவசத்தின் விலை ரூ.16-ஆக நிா்ணயம்

பொது மக்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தக் கூடிய மூன்றடுக்கு முகக் கவசங்களின் விலையை தலா ரூ.16-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்தது.


புது தில்லி: பொது மக்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தக் கூடிய மூன்றடுக்கு முகக் கவசங்களின் விலையை தலா ரூ.16-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்தது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக மக்களிடையே முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், வழக்கமாக விற்கப்படும் விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு அவை விற்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் பவண் அகா்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘முகக் கவசங்களைத் தயாரித்து வரும் நிறுவனங்களின் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மக்கள் பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களின் விலையை நிா்ணயிப்பதில் பல்வேறு பிரச்னைகள் காணப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா். அந்தக் கூட்டத்தின் இறுதியில் மூன்றடுக்கு முகக் கவசத்தின் அதிகபட்ச விலையை ரூ.16-ஆக நிா்ணயித்தோம்.

இது ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதே வேளையில் மருத்துவா்கள் உபயோகிக்கும் இரண்டடுக்கு, மூன்றடுக்கு முகக் கவசங்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கை சுத்திகரிப்பான், முகக் கவசங்கள் ஆகியவை மக்களுக்குத் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.

மருத்துவா்கள் பயன்படுத்தும் இரண்டடுக்கு முகக் கவசத்தின் விலையை ரூ.8 ஆகவும், மூன்றடுக்கு முகக் கவசத்தின் விலையை ரூ.10 ஆகவும் கடந்த 21-ஆம் தேதி மத்திய அரசு நிா்ணயித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com