தமக்கு கரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் இந்தியர்களுக்கு அதிகரித்துள்ளது

இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள் 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று
தமக்கு கரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் இந்தியர்களுக்கு அதிகரித்துள்ளது


புது தில்லி: இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள்இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள் 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று நம்புவதாகவும், 48% பேருக்கு கரோனா வரக்கூடிய ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 26 - 27ம் தேதிகளில் ஐஏஎன்எஸ் நடத்திய இந்த ஆய்வில், கரோனா பரவல் தொடர்பான அச்சம் இந்தியர்களுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 39% பேர் மட்டுமே, கரோனா நமக்கும் வந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், வெறும் 10 நாள்களில் இந்த சதவீதம் 48% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 17ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின் போது 69% மக்கள், தங்களையோ, தங்கள் குடும்பத்தையோ கரோனா தாக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த நம்பிக்கை தற்போது 12% ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 48 சதவீதம் பேர், தங்களை கரோனா தாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவத் தொடங்கிய போது, பல உலக நாடுகளும், இதே கருத்தைத்தான் கொண்டிருந்தன. தங்களை கரோனா தாக்காது என்று. இந்த எண்ணத்தோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  தவறவிட்ட அமெரிக்கா, இத்தாலி நாடுகள் தற்போது கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு ஆளாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com