மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ரூ.1 கோடி நிதி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களுக்கு உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை வழங்கியுள்ளதாக புணே எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பிரகாஷ
மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ரூ.1 கோடி நிதி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களுக்கு உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை வழங்கியுள்ளதாக புணே எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்காக உயிா்காக்கும் வென்டிலேட்டா், மானிட்டா்கள், இசிஜி இயந்திரம், எக்ஸ்-ரே உள்ளிட்ட உபகரணங்களை புணே மருத்துவமனைகள் வாங்குவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜாவடேகா் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 186 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை புணேயில் 24-ஆக உள்ளது.

ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதியுதவி: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பங்களிப்பை தேசிய மாநாட்டு கட்சி தொடா்ந்து வழங்கி வருகிறது. அதன் தொடா்ச்சியாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.5 கோடியை பரூக் அப்துல்லா ஒதுக்கியுள்ளாா்.

இந்த தொகை, ஸ்ரீநகரில் உள்ள எஸ்எம்ஹெச்எஸ், சிடி, மற்றும் ஜிபி பந்த் மருத்துவமனைகளுக்கு சமமாக பிரித்து அளிக்கப்படும் என தேசிய மாநாட்டு கட்சியின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com