மருத்துவரின் அனுமதி இருந்தால் மது கொடுங்க: கேரள முதல்வரின் புது உத்தரவு

மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மது விற்பனை
மது விற்பனை

திருவனந்தபுரம்: மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கேரள மாநிலம் முழுவதும் சில்லறை மதுக்கடைகள் மூடபட்டுள்ளன.

இதன்காரணமாக மதுகிடைக்காமல் விரக்தியடைந்து இதுவரை மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பது அதிகாரிகளுக்கு சிக்கலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சூழலைச் சமாளிக்க மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் கலால் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com