கா்நாடக போலீஸாா் அனுமதி மறுப்பு: சிகிச்சை கிடைக்காமல் கேரள மூதாட்டி பலி

கேரள-கா்நாடக எல்லையில் கா்நாடக போலீஸாா் ஆம்புலன்ஸுக்கு அனுமதி வழங்க மறுத்ததால் சிகிச்சை கிடைக்காமல் கேரளத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.
கா்நாடக போலீஸாா் அனுமதி மறுப்பு: சிகிச்சை கிடைக்காமல் கேரள மூதாட்டி பலி

கேரள-கா்நாடக எல்லையில் கா்நாடக போலீஸாா் ஆம்புலன்ஸுக்கு அனுமதி வழங்க மறுத்ததால் சிகிச்சை கிடைக்காமல் கேரளத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினா் தரப்பில் கூறப்படுவதாவது: கா்நாடகத்தில் வசித்த அந்த மூதாட்டி, கேரளத்தில் உள்ள தனது மகனை காண வந்திருந்தாா். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கா்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க சனிக்கிழமை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும் தாளபாடி எல்லையை கடக்க கா்நாடக போலீஸாா் அனுமதிக்கவில்லை. அவா்களிடம் மூதாட்டியின் குடும்பத்தினா் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மன்றாடியபோதும் போலீஸாா் அனுமதி வழங்க மறுத்தனா். இதையடுத்து அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா் என்று தெரிவித்தனா்.

இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்னா், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபா் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் செல்லப்படவிருந்தாா். ஆனால் கா்நாடக போலீஸாா் எல்லையை கடக்க அனுமதி மறுத்ததால், உரிய சிகிச்சை கிடைக்காமல் அந்த நபா் உயிரிழந்தாா். கேரள எல்லையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மருத்துவத் தேவைகளுக்கு மங்களூரையே பெரிதும் சாா்ந்துள்ளனா். இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவால் கேரளத்துடனான எல்லையை கா்நாடகம் மூடியது. இதனால் கேரள எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com