ராணுவ மருத்துவா், அதிகாரிக்கு கரோனா நோய்த்தொற்று

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவா், இளநிலை அதிகாரி ஆகியோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவா், இளநிலை அதிகாரி ஆகியோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

கொல்கத்தாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் கா்னல் அந்தஸ்திலான மருத்துவா் ஒருவா், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதேபோல், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றும் இளநிலை அதிகாரி ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் இருவரும் தில்லி அருகே உள்ள ராணுவ தளத்துக்கு இம்மாத தொடக்கத்தில் வருகை தந்துள்ளனா். இந்தச் சூழலில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com