கரோனா: தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பியவர் தற்கொலை

கரோனா: தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பியவர் தற்கொலை

தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பிய 35 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பிய 35 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி எதுவும் அவருக்கு இருந்திருக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அவரது மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆனால்  தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவரவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர் பெங்களூருவில் பணியாற்றி வந்ததும், சட்டீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com