கரோனா வைரஸ்: உலகம், இந்தியா, மாநிலங்களில் தற்போதைய நிலை

உலக அளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 430 ஆக உள்ளது. இதுவரை உலக அளவில் கரோனா பாதித்து 37,800 பேர் மரணம் அடைந்துள்ளனர். 
கரோனா வைரஸ்: உலகம், இந்தியா, மாநிலங்களில் தற்போதைய நிலை


உலக அளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 430 ஆக உள்ளது. இதுவரை உலக அளவில் கரோனா பாதித்து 37,800 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

1,65,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மதியம் நிலவரப்படி 1,251 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 102 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டிவிட்ட நிலையில் மகாராஷ்டிரமும், கேரளமும் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன.

  • தமிழ்நாடு: இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
  • ஆந்திர மாநிலம் : இன்று புதிதாக 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40.
  • கர்நாடகம்: 98 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் குணமடைந்துவிட்டனர்.
  • கேரளம் : இன்று  கேரளத்தில் கரோனா பாதிப்புக்கு இரண்டாவது நபர் உயிரிழந்தார்.
  • குஜராத் : புதிதாக மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 73 ஐ தொட்டது.
  • மகாராஷ்டிரம்: மேலும் 5 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து மகாராஷ்டிரம் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
  • மத்தியப் பிரதேசம்: 17 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான அடுத்து 66 ஆக உயர்வு.
  • ராஜஸ்தான்: ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்வக்ளில் 7 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து இங்கு மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
  • புது தில்லி: நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்தவர்களில் 24 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com