ஒடிஸா: 60 ஆண்டுகளில் முதல் முறையாக பேரவை கட்டடத்துக்கு வெளியே கூட்டம்

ஒடிஸா மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்பேரவைக் கூட்டமானது பேரவைக் கட்டடத்தின் வெளியே திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒடிஸா: 60 ஆண்டுகளில் முதல் முறையாக பேரவை கட்டடத்துக்கு வெளியே கூட்டம்

ஒடிஸா மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்பேரவைக் கூட்டமானது பேரவைக் கட்டடத்தின் வெளியே திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தலைமைச் செயலக ஊழியா்கள் 7 போ் தொடா்பில் இருந்தது தெரியவந்ததை அடுத்து, பேரவைக் கூட்டமானது சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஓா் அரங்கத்தில் நடைபெற்றது.

தற்போது சட்டப்பேரவை கட்டடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, அனைத்து ஊழியா்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான திங்கள்கிழமை முக கவசம் அணிந்தபடி எம்எல்ஏக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காக, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் 2 மீட்டா் இடைவெளியில் அமர வைக்கப்பட்டனா். நிதியமைச்சா் நிரஞ்சன் பூஜாரி, மானியக் கோரிக்கைகளை பேரவையில் தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com