சென்செக்ஸ் 700 புள்ளிகள், நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவக்கம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவை சந்தித்த நிலையில், செவ்வாய்க
சென்செக்ஸ் 700 புள்ளிகள், நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவக்கம்

சென்செக்ஸ் 700 புள்ளிகள், நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவக்கம்
இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவை சந்தித்த நிலையில், செவ்வாய்கிழமை காலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்து 29,130 என்ற நிலையிலும், நிப்டி 218 புள்ளிகள் உயர்ந்து 8,499 என்ற நிலையிலும் வர்த்தகமாயின. 

இந்தியப் பங்குச் சந்தைகளைப் போலவே மெல்ல உலக அளவிலான பங்குச் சந்தைகளிலும் இன்று சாதகமான நிலையே காணப்பட்டது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எச்டிஎஃப்சி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் இன்று உயர்வில் முன்னணியில் இருந்தன.

சா்வதேச அளவிலும் இந்தியாவிலும் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கை அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகளிலும் நேற்று வா்த்தகம் இறங்கு முகமாகவே காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகளும் பின்னடைவையே சந்தித்தன. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் நேற்று உணரப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com