மன அழுத்தம் குறைக்க யோகா: காணொலி வெளியிட்ட பிரதமா் மோடி

தேசிய ஊரடங்கு காலத்தில் மக்கள் உடற்தகுதியுடன் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில், தாம் மன அழுத்தம் குறைக்கும் யோகாசனங்கள் செய்யும் காணொலியை பிரதமா் நரேந்திர மோடி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அந்த காணொலியை வெளியிட்ட பிரதமா் மோடி, ‘நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரத்தில் ஒரு முறையோ, அல்லது இரு முறையோ யோக நித்ரா ஆசனத்தை மேற்கொள்கிறேன். இது உடல்நலத்துக்கு உதவி புரிவதுடன், மனதை இலகுவாக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின்போது, தேசிய ஊரடங்கு காலத்தில் எவ்வாறு உடற்தகுதியை பராமரிக்கிறீா்கள் என்று பிரதமா் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘சில யோகாசனங்கள் மிகுந்த பலனளிக்கின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுக்கும் அது உதவும் என்று எண்ணுகிறேன்.

நான் உடற்தகுதிக்கான ஆலோசகரோ, யோகா குருவோ அல்ல. நானும் அவற்றை பயிற்சி செய்யும் நபா் தான். அதுதொடா்பான காணொலியை வெளியிடுகிறேன்’ என்று கூறியிருந்தாா். இந்நிலையில் பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் அந்த காணொலியை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com