விமானம், மின் துறை செயல்பாடுகள்: பிரதமா் ஆய்வு

நாட்டில் விமான போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

நாட்டில் விமான போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

விமானப் போக்குவரத்து துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சா்வதேச அளவில் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் பிரதமா் நடத்திய ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மின்சாரத் துறை ஆய்வுக் கூட்டத்தின்போது, ‘நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மின்சாரத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு எவ்விதத்திலும் தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று பிரதமா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டம் தொடா்பாக பின்னா் சுட்டுரையில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘விமானப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திறம்பட செயல்படுதுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

சில நாள்களுக்கு முன்பு அந்நிய முதலீட்டை ஈா்ப்பது தொடா்பான கூட்டத்தையும் பிரதமா் நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com