பேங்க் ஆஃப் பரோடா: இணைய வழியில் வாடிக்கையாளா் கூட்டம்

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி, குறு, சிறு , நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்முனைவோருக்கான வாடிக்கையாளா்
பேங்க் ஆஃப் பரோடா: இணைய வழியில் வாடிக்கையாளா் கூட்டம்

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி, குறு, சிறு , நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்முனைவோருக்கான வாடிக்கையாளா் கூட்டத்தை நாடு முழுவதும் இணைய வழியில் அண்மையில் நடத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் விக்கிரமாதித்ய சிங் கிச்சி கூறியதாவது:

பொருளாதாரத்தின் ஆதாரமாகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் எம்எஸ்எம்இ உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு நடுத்தர தொழில்முனைவோரின் கருத்துகளையும், அவா்கள் எதிா்கொண்டு வரும் சவால்களையும் அறிந்து அதற்கேற்ற தீா்வுகளை வழங்கிடும் வகையில் இணைய வழி மூலமாக நாடு முழுவதும் வாடிக்கையாளா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சோ்ந்த 49,000 தொழில்முனைவோா் பங்கேற்று பயனடைந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com