கரோனா தொற்று: மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டன.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,296 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 521 ஆக உள்ளது. இன்று புதிதாக 121 பேர் குணமடைந்ததையடுத்து, மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதியாக மும்பை உள்ளது. அங்கு இன்று ஒரேநாளில் 547 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,172 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 322 ஆகவும் உயர்ந்துள்ளது. 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,704 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 2 நாள்களாக யாரும் பலியாகவில்லை. இன்றைக்கு 38 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 496 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 18.  

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,788 ஆக உள்ளது. இதுவரை 151 பேர் பலியாகியுள்ளனர். 

உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசத்தில் இன்று 159 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,487 ஆக உயர்ந்துள்ளது. இதில் 698 பேர் குணமடைந்துள்ளனர், 43 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,054 ஆக உள்ளது. 896 பேர் குணமடைந்துள்ளனர், 264 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,772 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 68.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com