வெளிமாநிலத் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப 400 ரயில்கள் தேவை: கேரள தலைமைச் செயலர்

கேரளத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப 400 ரயில்கள் தேவைப்படும் என அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில் மூலம் ஜெய்ப்பூரிலிருந்து பாட்னா வந்தடைந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்
சிறப்பு ரயில் மூலம் ஜெய்ப்பூரிலிருந்து பாட்னா வந்தடைந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்


கேரளத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப 400 ரயில்கள் தேவைப்படும் என அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலுவாவிலிருந்து புவனேஸ்வரத்துக்கு 1,148 தொழிலாளர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் ரயில் புறப்பட்டது. இதேபோல் இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சுமார் 1,150 தொழிலாளர்களுடன் ஒரு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் எங்கும் இடை நில்லாது நேரடியாக ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைகிறது. ஒவ்வொரு தொழிலாளரும் அடிப்படைக் கட்டணமாக ரூ. 875 செலுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து புவனேஸ்வர் மற்றும் பாட்னாவுக்கு எர்ணாகுளத்திலிருந்து தலா ஒரு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள தலைமைச் செயலர் டாம் ஜோஸ் இதுபற்றி இன்று (சனிக்கிழமை) தெரிவித்ததாவது:

"நேற்றிரவு முதல் ரயில் புறப்பட்டுச் சென்றது. இன்றைக்கு கூடுதலாக சில ரயில்களும், நாளை இன்னும் கூடுதலாக சில ரயில்களும் புறப்படவுள்ளன. இங்குள்ள தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கு 300 முதல் 400 ரயில்கள் தேவைப்படும். இதற்கு ஒருமாத காலமாகும்."

கேரள மாநிலம் தொழிலாளர் துறை தகவலின்படி, மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து கேரள மாநில முழுவதிலும் 20,826 முகாம்களில் 3,61,190 வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com