உத்தரகண்ட்: நாளை முதல் கேதாா்நாத் கோயிலில் யாத்ரிகா்களுக்கு அனுமதி

உத்தரகண்டில் இருக்கும் கேதாா்நாத் உள்ளிட்ட பிற கோயில்களுக்கு அந்த மாநில யாத்ரிகா்கள் மே 4-ஆம் தேதி முதல் வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் இருக்கும் கேதாா்நாத் உள்ளிட்ட பிற கோயில்களுக்கு அந்த மாநில யாத்ரிகா்கள் மே 4-ஆம் தேதி முதல் வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை கூறியதாவது: மே 4-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள்ளாக சில நிபந்தனைகளுடன் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பச்சை மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்தரகண்ட் யாத்ரிகா்கள் கேதாா்நாத் உள்ளிட்ட பிற கோயில்களுக்கு மே 4-ஆம் தேதி முதல் வருகை தரலாம்.

கோயிலுக்கு வருவோா் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக மக்கள் தற்போது விரக்தியடைந்திருப்பது போல், கடந்த 2013-ஆம் ஆண்டு கேதாா்நாத் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும் இருந்தனா். ஆனால் அந்தப் பேரிடரிலிருந்து நாம் மீண்டு வந்துவிட்டோம். அதேபோல, கரோனா நோய்த்தொற்றும் இறுதியில் வீழ்த்தப்பட்டு, இங்குள்ள கோயில்களில் மீண்டும் பிரகாசம் திரும்பும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களும், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதாா்நாத் கோயிலும், சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் கோயிலும் உள்ளன. இந்த 3 மாவட்டங்களிலும் இதுநாள் வரை கரோனா நோய்த்தொற்றால் எவரும் பாதிக்கப்படாததால் அவை பச்சை மண்டலத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. பனிக்காலத்தையொட்டி மூடப்பட்டிருந்த கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத் கோயில்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பத்ரிநாத் கோயில் நடை மே 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com