ஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
ஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நீட் தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 

அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஜே.இ.இ (JEE ) தேர்வு ஜுலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், ஜே.இ.இ அட்வான்ஸ் (JEE advance) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும்  அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com