
நவன்ஷஹர்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹர் அருகே விழுந்து நொறுங்கியது. விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார்.
சுஹர்புர் கிராமத்தில வயல் வெளியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியதாக நவன்ஷஹர் உதவி ஆணையர் வினய் பூப்லானி தெரிவித்துள்ளார்.
ஜலந்தர் அருகே உள்ள பயிற்சி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 29 ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாகவும், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு, விமானி அதில் இருந்து குதித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.