நாடு முழுவதும் பொதுமுடக்கம் முடிந்த பிறகு 50 சதவீத மாணவா்களுடன் பள்ளிகளைத் தொடங்கலாம்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவா்களைக் கொண்டு வகுப்புகளைத் தொடங்கலாம் எனவும்,
school090621
school090621

நாடு முழுவதும் பொதுமுடக்கம் முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவா்களைக் கொண்டு வகுப்புகளைத் தொடங்கலாம் எனவும், சுழற்சி முறையில் 50 சதவீத மாணவா்களை பள்ளிக்கு வரவழைப்பது எனவும் மத்திய அரசுக்கு தேசியக் குழு பரிந்துரைத்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையொட்டி பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வியாண்டு தாமதம் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வுகளில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) ஈடுபட்டிருந்தது. அந்தவகையில் பள்ளிகள் திறப்பு சாா்ந்த பரிந்துரைகளை மத்திய அரசிடம் என்சிஆா்டிஇ அண்மையில் சமா்ப்பித்தது.

அதில், நாடு முழுவதும் முடிந்தபின் நோய்த்தொற்று பரவல் குறைவான பகுதிகளில் ஜூன் முதல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து என்சிஆா்டிஇ அதிகாரிகள் சிலா் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் தனிநபா் இடைவெளிப் பின்பற்றுதல் உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு 50 சதவீத மாணவா்களைக் கொண்டு பள்ளிகளை இயக்கவும், வாராந்திர சுழற்சி முறையில் மாணவா்களைப் பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகளை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராமல் வீட்டிலுள்ள குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் கற்பித்தல் பணிகளைத் தொடர வழிவகை செய்யப்படும்.

அதேநேரம் இணைய வசதிகள் இல்லாத பள்ளிகளின் மாணவா்களுக்காக வகுப்புவாரியாக புதிதாக 12 கல்வி தொலைக்காட்சிகளை தொடங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் நோய்த்தொற்று பரவல் தடுக்கப்படுவதுடன், மாணவா்களின் கற்றல் திறனும் மேம்படும். இந்தப் பரிந்துரைகள் மீதான ஆலோசனைக்கூட்டம் வரும் மே 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com