வெளிநாட்டில் இருந்து கேரளம் திரும்பிய இருவருக்கு கரோனா: முதல்வர் பினராயி விஜயன் 

கேரளத்தில் இன்று 2 பேருக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டில் இருந்து கேரளம் திரும்பிய இருவருக்கு கரோனா: முதல்வர் பினராயி விஜயன் 

கேரளத்தில் இன்று 2 பேருக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,320 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளத்தில் இன்று 2 பேருக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், நோய்த் தொற்று ஏற்பட்ட 2 பேரும் நேற்று வெளிநாட்டில் இருந்து கேரளம் திரும்பியவர்கள். தற்போது வரை 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். இன்று கரோனா பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் கோழிக்கோடுவுக்கும், மற்றொருவர் கொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்றுக்குள்ளான இருவரும் துபையில் இருந்து கேரளம் திரும்பியர்கள்.

இத்துடன் அங்கு ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 505ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 17 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com