சூரத்திலிருந்து திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று: ஒடிசாவில் மொத்த பாதிப்பு 391

சூரத்திலிருந்து திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று: ஒடிசாவில் மொத்த பாதிப்பு 391

சூரத்திலிருந்து ஒடிசாவுக்குத் திரும்பிய மேலும் 14 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று சாதகமாக உள்ளதாக திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்: சூரத்திலிருந்து ஒடிசாவுக்குத் திரும்பிய மேலும் 14 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று சாதகமாக உள்ளதாக திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட 14 பேரில், கஞ்சம் (12) மற்றும் சுந்தர்கர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலிருந்து தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கஞ்சம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரும் சமீபத்தில் சூரத்திலிருந்து திரும்பியவர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த இவர்கள் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் சுந்தர்கரில் 14, கேந்திரபாரா மாவட்டங்களில் ஒன்பது பேரும் பாதிக்கப்பட்டுள்ளது. 

320 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  ஒடிசாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,698 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 63 ஆயிரத்து 478 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com