மத்தியப் பிரதேசத்தில் கரோனாவை வென்ற 20 நாள் பச்சிளம் குழந்தை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியான இந்தூரில் பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியான இந்தூரில் பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

இந்த பச்சிளம் குழந்தை உள்பட 21 குழந்தைகள் கரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில், குழந்தைகள் விரைவாக குணமடைய அவர்களது தாய்மார்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாகவும், அவர்களது அன்பும், அளப்பரிய சேவையுமே குழந்தைகளை இந்த கடினமான போரில் வெற்றி பெற வைத்தது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மூத்த மருத்துவர் ராஷ்மி கூறுகையில், பிறந்து 20 நாள்களே ஆன பெண் குழந்தை மற்றும் 2 மாதங்கள், 18 மாதங்கள் ஆன இரண்டு ஆண் குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

பிறந்து 20 நாள் ஆன பச்சிளம் குழந்தை மே 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மே 9ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு, அதன் நெருங்கிய உறவினர்கள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிசயம் என்னவென்றால், அதோடு 24 மணி நேரமும் இருக்கும் அதன் தாய்க்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதுபோன்ற சமயத்தில் குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது துயரமாக இருக்கிறது. அதே சமயம் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com