மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தல்: உத்தவ் தாக்கரே வேட்புமனுத் தாக்கல்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமேலவைத் தேர்தலில் (எம்எல்சி) போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.
மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தல்: உத்தவ் தாக்கரே வேட்புமனுத் தாக்கல்


மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமேலவைத் தேர்தலில் (எம்எல்சி) போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிர பேரவையில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 9 சட்டமேலவை இடங்கள் காலியாகின. கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தத் தேர்தல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மே 21-ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. மேலும், தேர்தலின்போது கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த நிலையில், இதற்கான வேட்புமனுவை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று தாக்கல் செய்தார்.

போட்டியின்றி தேர்வாகவுள்ள உத்தவ்:

சட்டமேலவைத் தேர்தலில் ஆட்சியில் உள்ள சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் தலா 2 பேரும், பாஜக சார்பில் 4 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் 9 இடங்களில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது.

பாஜக எதிர்க்கட்சி என்பதால் அக்கட்சியில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் தலா 2 பேர் என மொத்தம் 6 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது, அக்கூட்டணிக்குள் போட்டியை ஏற்படுத்தியது. 

இதனால் தோ்தலில் போட்டியிடும் உத்தவ் தாக்கரே வெற்றிபெறுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, தனது முடிவை மாற்றிக்கொண்ட காங்கிரஸ், தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் போட்டியிடுவதாக அறிவித்தது. காங்கிரஸின் இந்த முடிவால் ஆளும் கூட்டணியில் போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் உத்தவ் தாக்கரே எம்எல்சி பதவிக்கு போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com