ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நீக்கியதா கூகுள் மேப்? 

ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியையும் ஒன்றிணைத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நீக்கியதா கூகுள் மேப்? 


ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியையும் ஒன்றிணைத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை வெளியிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

அதாவது, ஜம்மு - காஷ்மீரில் இதுவரை பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீரை தனித்துக் காட்ட ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கூகுள் வரைபடத்தில் இருந்து வந்தது. அது தற்போது நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்திய வரைபடத்தில் காண்பிக்கப்படுகிறது.

இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? இதனை கூகுள் எவ்வாறு செய்திருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்ததில் நமக்குக் கிடைத்த சில உண்மைத் தகவல்கள்.

உண்மை என்னவென்றால், இந்தியாவுக்குள் இருந்து பார்க்கும் போது மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு இடையே அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தெரியாது. அதே சமயம், இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து கூகுள் இந்திய வரைபடத்தைப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் அந்த கோடு தென்படும்.

அதாவது, ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதை சாம்பல் நிறத்தில் காண்பிப்பதும், ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை, அது இடம்பெற்றிருக்கும் நாடு ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், அந்த நாட்டில் இருந்து கூகுள் வரைபடத்தைப் பார்க்கும் போது அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை காண்பிக்காத வகையிலும் கூகுள் மேப் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

எனவே, கூகுள் மேப்பில் இருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது என்பது தவறான தகவல். வெளி நாடுகளில் இருந்து பார்க்கும் போது அந்தக் கோடு காணப்படும் என்பதே உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com