கேரளத்தில் தலைமைச்செயலக ஊழியர்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50 நாள்களுக்குப் பிறகு கேரள சாலைப் போக்குவரத்துக் கழகம் தலைமைச் செயலகத்தின் ஊழியர்களுக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. 
கேரளத்தில் தலைமைச்செயலக ஊழியர்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை

திருவனந்தபுரம்: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50 நாள்களுக்குப் பிறகு கேரள சாலைப் போக்குவரத்துக் கழகம் தலைமைச் செயலக ஊழியர்களுக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. 

தலைநகரில் உள்ள ஒன்பது பேருந்து நிலையங்களில் இருந்து இன்று முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த பேருந்து சேவை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. மேலும், பேருந்துகளில் கை சுத்தத் திரவம்(சனிடைஸர்) வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் இதைப் பயன்படுத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்தில் நின்றுகொண்டு பயணம்  செய்ய அனுமதி இல்லை. 

இதுகுறித்து, ஊழியர் ஒருவர் கூறுகையில், 

இன்று எனது அலுவலகப் பயணத்திற்கு ரூ.39 செலவு செய்துள்ளேன். ஊரடங்குக்கு முன்பு எனது பயண செலவு இதைவிட இரட்டிப்பாகச் இருந்தது. பேருந்து பயணத்தின்போது அனைத்து சுகாதார நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com