மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு

​ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர்.
மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு


ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நாளை (செவ்வாய்கிழமை) முதல் 15 ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்தது. ஐஆர்சிடிசி-யில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில் நிலையங்களில் நேரடியாக பயணச் சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், எண்ணற்ற பயணிகள் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளத்தில் குவிந்ததாகத் தெரிகிறது. இதனால், ஐஆர்சிடிசி முடங்கியது.

இதைத் தொடர்ந்து 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் 6 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் சுமார் 54 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி இந்திய ரயில்வே அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "இரவு 9.15 மணி நிலவரப்படி சுமார் 30,000 பிஎன்ஆர் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com