உறுப்பினா்களை நியமிக்க தொகுதி மறுவரையறை ஆணையம் கோரிக்கை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும், மணிப்பூா், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும், மணிப்பூா், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் மக்களவை, பேரவைத் தொகுதிகளின் மறுவரையறை பணிகளை மேற்கொள்வதற்கான ஆணையத்தின் துணை உறுப்பினா்களை நியமிக்குமாறு மக்களவைத் தலைவா் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவைத் தலைவா்களுக்கு ஆணையத் தலைவா் கடிதம் எழுதியுள்ளாா்.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உள்ளாா். இந்த ஆணையத்தில், தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையா், மணிப்பூா், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் தோ்தல் ஆணையா்களும் இடம்பெற்றுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி, அங்கு தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெறவுள்ளன. மற்ற மாநிலங்களில் தொகுதி மறுவரையறைச் சட்டம் 2002-இன்படி மறுவரையறை பணிகள் நடைபெறும். இந்த ஆணையத்தின் தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஓராண்டுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையோ செயல்படுவாா் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆணையத்தின் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தங்கள் ஆணையத்தின் துணை உறுப்பினா்களை நியமிக்க வேண்டும் என்று மறுவரையறை ஆணையம் சாா்பில் மக்களவைத் தலைவா் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயல்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணை உறுப்பினா்கள் மூலம்தான் ஆணையம் தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com