பிகாரில் கரோனா பாதிப்பு 761 ஆக உயர்வு: புதிதாக 15 பேருக்குத் தொற்று

பிகாரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 
பிகாரில் கரோனா பாதிப்பு 761 ஆக உயர்வு: புதிதாக 15 பேருக்குத் தொற்று

பாட்னா: பிகாரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

இதில், பாதிக்கப்பட்ட 9 பேர் பெகுசாரைச் சேர்ந்தவர்கள், இருவர் தர்பங்காவையும், நாலந்தா, சமஸ்திபூர், ஷெய்க்புரா மற்றும் சுபால் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 20-40 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் கூறினார். பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் கரோனா பரவியுள்ளது. ஜமுய் மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை.

பாட்னா, ரோஹ்தாஸ், முங்கர், வைஷாலி, கிழக்கு சம்பரன் மற்றும் சீதாமாரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.  377 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். தற்போது 378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முங்கர் அதிகபட்சமாக 115 ஆகவும், பாட்னா 70 ஆகவும், ரோஹ்தாஸ் (59), பக்ஸர் (56), நாலந்தா (50), சிவான் (33), கைமூர் (32), பெகுசராய் (31) எனவும் பதிவாகியுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக இவை உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com