சிறப்பு ரயில்கள் மூலம் 6.48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்: ரயில்வே

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதுவரை இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு ரயில்கள் மூலம் 6.48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்: ரயில்வே


புது தில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதுவரை இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன, இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன.

ஆந்திரம் (1 ரயில்), பிகார் (117 ரயில்கள்), சத்தீஸ்கர் (1 ரயில்), ஹிமாச்சல் பிரதேசம் (1 ரயில்), ஜார்கண்ட் (27 ரயில்கள்), கர்நாடகம் (1 ரயில்), மத்தியப்பிரதேசம் (38 ரயில்கள்), மகாராஷ்டிரம் (3 ரயில்கள்), ஒடிசா (29 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்), தெலங்கானா (2 ரயில்கள்), உத்திரப்பிரதேசம் (221 ரயில்கள்) மற்றும்  மேற்கு வங்கம் (2 ரயில்கள்) என பல்வேறு மாநிலங்களுக்கு 448 ரயில்கள் சென்றடைந்தன.

திருச்சிராப்பள்ளி, டிட்லகர், பரவுனி, கண்ட்வா, ஜகன்நாத்பூர், குர்தா ரோடு, பிரக்யாராஜ், சப்பரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னௌ, ஜாவ்ன்பூர், ஹாட்டியா, பஸ்டி, காடிஹார், தனப்பூர், முசாபர்பூர், சஹஸ்ரா ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தோரை இந்த ரயில்கள் ஏற்றி சென்றன.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகளுக்கு இலவச உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இதுவரை 6.48 லட்சம் பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com