கரோனா பரவலுக்கு இடையே செவிலியர் பணியைத் தொடரும் 9 மாத கர்ப்பிணி

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் ரூபா பர்வீன் ராவ், 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
கரோனா பரவலுக்கு இடையே செவிலியர் பணியைத் தொடரும் 9 மாத கர்ப்பிணி


ஷிவ்மோகா: கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் ரூபா பர்வீன் ராவ், 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

கஜனுரு கிராமத்தைச் சேர்ந்த ரூபா பர்வீன் ராவ், ஜெயசமராஜேந்திர அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

தினமும் அவர் கிராமத்தில் இருந்து தீர்த்தஹள்ளி தாலுகாவுக்கு சென்று நோயாளிகளுக்காக சேவையாற்றி வருகிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், இந்த மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மக்களுக்கு எங்கள் சேவை தேவைப்படுகிறது. என்னுடன் பணியாற்றுவோர் என்னை விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் பணியை தொடர்கிறேன். தினமும் ஆறு மணி நேரம் பணியாற்றுகிறேன் என்கிறார்.

மேலும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, தனது பணிக்காகப் பாராட்டியதாகவும், விடுமுறை எடுத்துவிட்டு ஓய்வெடுக்குமாறு அறிவுரை வழங்கியதையும் பகிர்ந்து கொண்டார்.

தங்களது இன்னுயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஏராளமான மருத்துவப் பணியாளர்களைப் போலவே ரூபாவும் திகழ்கிறார்.

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நேரத்தில் இதுபோன்ற செவிலியர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்த வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com