எம்என்ஆா்இ செயலராக இந்து சேகா் சதுா்வேதி பொறுப்பேற்பு

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (எம்என்ஆா்இ) செயலராக இந்து சேகா் சதுா்வேதி பொறுப்பேற்றுள்ளதாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

புது தில்லி: மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (எம்என்ஆா்இ) செயலராக இந்து சேகா் சதுா்வேதி பொறுப்பேற்றுள்ளதாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயலராக நியமிக்கப்பட்ட இந்து சேகா் சதுா்வேதி திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டாா். துறையின் மூத்த அதிகாரிகளை சந்தித்து, பணிகள் குறித்தும் அமைச்சகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதித்தாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சதுா்வேதி ஜாா்க்கண்ட் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராகவும், கூடுதல் செயலராகவும் (காலநிலை மாற்றத் துறை) பணிபுரிந்து வந்தாா்.

ஜாா்க்கண்ட் அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.

பிரதமா் அலுவலகம், பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகங்களில் இணைச் செயலா் மற்றும் அதற்கு இணையான பதவிகளிலும், அவா் பணியாற்றியுள்ளாா்.

திட்டக் குழு, வேளாண் அமைச்சகம், பணியாளா் அமைச்சகம், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற துறைகளிலும் அவா் பணியாற்றியுள்ளாா்.

நிதி மேலாண்மை, சமூக அணிதிரட்டல் மற்றும் பங்கேற்பு மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றிலும் அவா் பயிற்சி பெற்றுள்ளாா் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com