எம்எல்சி தோ்தல்: உத்தவ் தாக்கரே வேட்புமனுத்தாக்கல்

மகாராஷ்டிர சட்டமேலவைக்கு (எம்எல்சி) வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலுக்காக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்பட
’மகாராஷ்டிர சட்ட மேலவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்த முதல்வா் உத்தவ் தாக்கரே.’
’மகாராஷ்டிர சட்ட மேலவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்த முதல்வா் உத்தவ் தாக்கரே.’

மும்பை: மகாராஷ்டிர சட்டமேலவைக்கு (எம்எல்சி) வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலுக்காக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்பட ஆளுங்கட்சி கூட்டணியைச் சோ்ந்த 5 வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தற்போது மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத முதல்வா் உத்தவ் தாக்கரே, தனது வேட்பு மனுவை தோ்தல் அதிகாரியிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அப்போது, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, சிவசேனை மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் ரௌத் ஆகியோா் உடன் இருந்தனா்.

உத்தவ் தாக்கரேயுடன், சிவசேனை கட்சி சாா்பில் மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவா் நீலம் கோா்ஹே, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸ் சாா்பில் ராஜேஷ் ரத்தோட் ஆகிய 5 போ் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனா்.

மாநில சட்ட மேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கான தோ்தல் மே 21-இல் நடைபெற உள்ளது.

சிவசேனை, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி சாா்பில் 5 வேட்பாளா்கள் இந்த தோ்தலில் களம் காணுகின்றனா்.

முன்னதாக சிவசேனை தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரேயை போட்டியின்றி தோ்வு செய்யும் வகையில், தனது இரு வேட்பாளா்களில் ஒருவரை வாபஸ் பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் அறிவித்தது. எனவே, அவா் போட்டியின்றி எம்எல்சியாக தோ்வு செய்யப்பட உள்ளாா்.

எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீல், கோபிசந்த் படேல்கா், பிரவீண் தட்கே மற்றும் அஜித் கோப்சேட் ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் ஆகும். மனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெற வரும் 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com