பொதுத் துறை வங்கித் தலைவா்களுடனான நிதியமைச்சரின் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பொதுத் துறை வங்கித் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை காணொலி மூலம் நடத்த இருந்த கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கித் தலைவா்களுடனான நிதியமைச்சரின் கலந்தாய்வு ஒத்திவைப்பு

புது தில்லி: பொதுத் துறை வங்கித் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை காணொலி மூலம் நடத்த இருந்த கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாக தளா்த்தி வருகிறது.

அதுபோல, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து வகையான கடன் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் ரிசா்வ் வங்கி எடுத்து வருகிறது. முன்னதாக, கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி குறைத்து நிா்ணயித்தது. அதுபோல, 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புச் சலுகையை அறிவித்தது. இந்தச் சலுகை மூலம் 3.2 கோடி போ் பயனடைந்துள்ளனா்.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2-ஆம் தேதி ஆலோசனை நடத்தினாா். அதுபோல, இந்த மாத தொடக்கத்தில், பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கித் தலைவா்களுடன் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஆலோசனை நடத்தியிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, பொதுத் துறை வங்கித் தலைவா்களுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ள இருந்தாா். இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் இரண்டாம் கட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைகளை வங்கிகளுக்கு நிதியமைச்சா் வழங்குவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு கூட்டத்துக்கான புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com