சிறப்பு ரயில்களில் ரூ. 16.15 கோடிக்கு 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு

இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ரூ. 16.15 கோடி மதிப்புள்ள 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 
சிறப்பு ரயில்களில் ரூ. 16.15 கோடிக்கு 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு

இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ரூ. 16.15 கோடி மதிப்புள்ள 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தில்லியில் இருந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று மட்டும் 15 இணை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில் நிலையங்களில் நேரடியாக பயணச் சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன. சுமார் 82 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ரூ. 16.15 கோடி மதிப்புள்ள 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com