உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று சாதகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று

ஹத்ராஸ்: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று சாதகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு  நொய்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சமீபத்தில், சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. 

இதையடுத்து, கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்த பிறகும், குடும்ப உறுப்பினர்களை கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தனிமைப்படுத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களை சார்ந்த சுமார் 27 பேரைத் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை மாலை கண்டறியப்பட்டது என்று தலைமை மருத்துவ அதிகாரி ரத்தோர் கூறினார். 

மேலும், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 பேருக்கு நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com