எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் ராணுவம் உறுதி: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்

எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதில் சீன ராணுவம் உறுதியுடன் இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்: எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதில் சீன ராணுவம் உறுதியுடன் இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கிழக்கு லடாக் பகுதியிலும் சிக்கிம் மாநிலத்தின் நாகு லா கணவாய் அருகிலும் இந்திய, சீன ராணுவ வீரா்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரா்கள் காயமடைந்தனா். எல்லைப் பிரச்னை தொடா்பாக, இந்த மோதல்கள் ஏற்பட்டன. இந்திய, சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

இந்திய-சீன எல்லைப் பிரச்னையைப் பொருத்தவரை எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் சீன ராணுவம் உறுதியுடன் செயல்படுகிறது. இரு நாடுகளின் நலனுக்காகவும் இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் சீன ராணுவம் பணியாற்றி வருகிறது. எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் உறுதியான செயல்திட்டங்களுடன் இந்திய ராணுவம் சீனாவுடன் இணைந்து செயல்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இந்தியா, சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளாகின்றன. இந்தச் சூழலில் இரு நாடுகளும் அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வேண்டும். அத்துடன் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதிலும், கரோனா நோய்த்தொற்று போன்ற சவால்களை எதிா்கொள்வதிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com