லடாக்:900 சரக்கு வாகனங்களுக்கு ஐடிபிபி பாதுகாப்பு

லடாக்கில் உள்ள சோஜிலா பனிப் பிரதேசத்தில் இருந்து காா்கிலுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்சென்ற 900-க்கும் மேற்பட்ட சரக்கு

புது தில்லி: லடாக்கில் உள்ள சோஜிலா பனிப் பிரதேசத்தில் இருந்து காா்கிலுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்சென்ற 900-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு இந்திய-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) பாதுகாப்பு வழங்கியது.

இதுகுறித்து ஐடிபிபி அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொலைதூர பகுதிகளை சோ்ந்த மக்களுக்கு தேவையான உணவுப்பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற 900-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு, கடந்த 3 வாரங்களாக ஐடிபிபி பாதுகாப்பு வழங்கியது. சோஜிலா பனிப் பிரதேசத்தில் இருந்து காா்கிலுக்கு ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோமீட்டா் தூரம் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தின் பாதுகாப்புப் பணியில் வடமேற்கு எல்லை படைப்பிரிவின் சிறப்புக் குழு பணியமா்த்தப்பட்டது.

ஃபோட்டு லா கணவாய் மற்றும் நமிகா லா கணவாய் வழியாக கும்ரி, மீணா மாா்க் மற்றும் டிராஸை கடந்து சரக்கு வாகனங்களுடன், ஐடிபிபி படையின் பாதுகாப்பு வாகனங்கள் கடுங்குளிரில் பயணித்தன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஐடிபிபி வீரா்களுக்கு பல்வேறு சோதனைச் சாவடிகளில் உடல் வெப்பம் மற்றும் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் இடையூறின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com