மேலும் 13 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி

மேலும் 13 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மேலும் 13 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 74,292 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2,415 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 13 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இருந்து புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி  நேரத்தில் 13 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களில் பேர் 11 தில்லியிலும், தலா ஒருவர் திரிபுரா மற்றும் கொல்கத்தாவில் பிரத்யேக கரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,525 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com