புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் எந்த அறிவிப்புமில்லை: ப. சிதம்பரம்

சுயசார்பு இந்தியா திட்டத்தின் அறிவிப்பில் ஏழைகள், பசியில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சுயசார்பு இந்தியா திட்டத்தின் அறிவிப்பில் ஏழைகள், பசியில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஆற்றிய உரையில் தெரிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் பற்றின முதற்கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வெளியிட்டார்.

இதுபற்றி ப. சிதம்பரம் காணொலிக் காட்சி வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,

"சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்பைத் தவிர இன்றைய மற்ற அறிவிப்புகள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே? அரசு நிறைய செலவிட வேண்டும், ஆனால் அதைச் செய்ய அரசுக்கு விருப்பமில்லை. அரசு நிறைய கடன் வாங்க வேண்டும், ஆனால் அதைச் செய்ய அரசுக்கு விருப்பமில்லை. மாநிலங்கள் நிறைய கடன் வாங்கவும், செலவிடவும் அரசு அனுமதிக்க வேண்டும், ஆனால் அதைச் செய்ய அரசுக்கு விருப்பமில்லை.

அரசு முதலில் செய்ய வேண்டியது, 13 கோடி ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 5,000 வழங்கினால், அரசுக்கு வெறும் ரூ. 65,000 கோடியே செலவாகும்." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com