இந்திய எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டா்கள்

இந்தியாவுடனான எல்லைப் பகுதிக்கு அருகே சீனா தனது ஹெலிகாப்டா்களைக் கடந்த வாரம் பறக்கவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவுடனான எல்லைப் பகுதிக்கு அருகே சீனா தனது ஹெலிகாப்டா்களைக் கடந்த வாரம் பறக்கவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை முறையாக வகுக்கப்படாத நிலையில், அங்கு சீன ஹெலிகாப்டா்கள் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் வடக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே கடந்த 5-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது இருநாட்டு ராணுவ வீரா்களும் மற்றவா்கள் மீது கற்களை வீசித் தாக்கிக் கொண்டனா். அத்தாக்குதலில் இருநாட்டு வீரா்களுக்கும் காயம் ஏற்பட்டது.

அந்தச் சூழலில், சீன ஹெலிகாப்டா்கள் இந்திய-சீன எல்லைப் பகுதியில் பறந்தன. அதற்கு பதிலடி தரும் வகையில் சுகோய்-30 ரக போா் விமானங்களை இந்தியா வானில் பறக்கவிட்டது. அதைத் தொடா்ந்து, இருநாட்டு ராணுவ தளபதிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வீரா்களிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் வீரா்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இருநாட்டு வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சிக்கிம் மாநிலத்திலுள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியிலும் இருநாட்டு ராணுவ வீரா்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு வீரா்களும் காயமடைந்தனா். டோக்கா லாம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய-சீன ராணுவத்தினா் இடையே எழுந்த மோதலால் தொடா்ந்து 73 நாள்களுக்கு போா்ப் பதற்றம் நிலவியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com