மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

பிரதமர் அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்


புது தில்லி: பிரதமர் அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று வெளிமாநில தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மூன்று அறிவிப்புகள்.
முத்ரா வங்கிக் கடன் தொடர்பான ஒரு அறிவிப்பு.
விவசாயிகளுக்கான இரண்டு அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.பிற அறிவிப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சாலையோர வியாபாரிகளுக்கு 1 அறிவிப்பும், சிறு வியாபாரிகளுக்கு இரண்டு அறிவிப்புகளையும் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதில் முக்கிய அறிவிப்புகளாவன: 

மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் கட்டாயமாக்கப்படும்.

வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு-தானிய உதவி தேவைப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு நபருக்கு 5 கிலோ தானியம் மற்றும் ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு விலை வீடுகளுக்கான மானிய திட்டம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தநிலையில் இந்த திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.  இதன் மூலம் சுமார் 2.5 லட்சம் நடுத்த வருவாய் கொண்ட குடும்பத்தினர் பலனடைவார்கள்.

ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டம் 83% நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டம் 100 சதவீதம் விரிவுபடுத்தப்படும்.

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்களும், கால்நடை வளர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் பலன்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு குறைந்த வாடகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  வாடகைக்கு விடப்படும்.

3 கோடி விவசாயிகள் பெற்றுள்ள ரூ.4.22 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடனுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

மானிய விலையில் அளிக்கப்பட்ட பயிர்க் கடன் தொகைக்கான வட்டியை செலுத்த கால அவகாசம் மார்ச் 1ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.  அதன் மூலம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின்படி சுமார் 2 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com