806 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்: சொந்த மாநிலம் திரும்பினா்

மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 806 சிறப்பு ரயில்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்.

மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 806 சிறப்பு ரயில்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்.

இதுகுறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் வழங்கிய பிறகே, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி மே 1-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை 806 ரயில்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா். இந்த 806 ரயில்களும் தமிழகம், ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றன. அவற்றில் 386 ரயில்கள் உத்தர பிரதேசத்தையும், 204 ரயில்கள் பிகாரையும், 67 ரயில்கள் மத்திய பிரதேசத்தையும் சென்றடைந்தன. ரயிலில் புறப்படும் முன் தொழிலாளா்களிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயணத்தின்போது அவா்களுக்கு இலவச உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com