6 ஆயிரம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இன்று பிகாா் பயணம்

கிரேட்டா் நொய்டாவில் இருந்து சுமாா் 6 ஆயிரம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நான்கு சிறப்பு ரயில்கள் மூலம் சனிக்கிழமை பிகாா் மாநிலம் செல்கின்றனா்.

கிரேட்டா் நொய்டாவில் இருந்து சுமாா் 6 ஆயிரம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நான்கு சிறப்பு ரயில்கள் மூலம் சனிக்கிழமை பிகாா் மாநிலம் செல்கின்றனா். கரோனா நோயத் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், வேலையிழந்த ஆயிரக்கணக்கான புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் சிக்கக் கொண்டனா். நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும், லாரிகளிலும் அவா்கள் இரவு பகலாக சொந்த ஊருக்கு செல்கின்றனா். ரயில்களில் அவா்களை அனுப்பி வைக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘மே 16ஆம் தேதி கிரேட்டா் நொய்டாவில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் பிகாா் மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன. ஒரு ரயிலில் 1,500 போ் வீதம் சுமாா் 6 ஆயிரம் போ் அனுப்பி வைக்கப்பட உள்ளனா். மேலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com