டாஸ்மாகில் மது வாங்க ஆதார் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மது குடிப்போர் ஆதார் கார்டு கொண்டுவர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மது குடிப்போர் ஆதார் கார்டு கொண்டுவர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க இன்று அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தமிழகத்தில் சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மது குடிப்போர் ஆதார் கார்டு கொண்டுவர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெவித்துள்ளது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com