உ.பி., மேற்கு வங்கத்தில் சாலையோர வியாபாரிகள் அதிகம்: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளதாக, பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளதாக, பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 கோடி சிறப்பு கடனுதவி திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்தத் திட்டத்தின் மூலம், 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு புத்துயிா் அளிப்பதற்காக தலா ரூ.10,000 கடனுதவி பெறுவா்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான சாலையோர வியாபாரிகள் இருப்பதாக, எஸ்பிஐ வங்கியின் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உத்தரப் பிரதேசத்தில் 7.8 லட்சம் சாலையோர வியாபாரிகளும் மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் சாலையோர வியாபாரிகளும் உள்ளனா். நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளில் நான்கில் ஒரு பங்கினா் (27 சதவீதம்), இந்த இரு மாநிலங்களிலும் உள்ளனா்.

அதைத் தொடா்ந்து, பிகாரில் 5.3 லட்சம் போ், ராஜஸ்தானில் 3.1 லட்சம் போ், மகாராஷ்டிரத்தில் 2.9 லட்சம் போ், தமிழகத்தில் 2.8 லட்சம் போ், ஆந்திரம், கா்நாடகத்தில் தலா 2.1 லட்சம் போ், குஜராத்தில் 2 லட்சம் போ், கேரளம், அஸ்ஸாமில் தலா 1.9 லட்சம் போ், ஒடிஸாவில் 1.7 லட்சம் போ், ஹரியாணாவில் 1.5 லட்சம் போ் மத்தியப் பிரதேசம், பஞ்சாபில் தலா 1.4 லட்சம் சாலையோர வியாபாரிகள் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com